Published : 26 May 2024 07:58 AM
Last Updated : 26 May 2024 07:58 AM
2024-க்கான சர்வதேசப் புக்கர் பரிசு ஜெர்மன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ‘கைரோஸ்’ (Kairos) என்கிற நாவலுக்கு வழங்கப்படுகிறது. எழுதியவர் பெண் எழுத்தாளர் ஜென்னி எர்பின்பெக் (Jenny Erpenbeck). மொழிபெயர்த்தவர் மைக்கல் ஹாஃப்மன் (Michael Hofmann).
கைரோஸ் எனும் சொல் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருளை நாவலாசிரியர் தன் தொடக்க உரையிலேயே விளக்கிவிடுகிறார்: ‘கைரோஸ், நல்வாய்ப்பைத் தரும் கடவுள். அவன் நெற்றிக்கு மேல் ஒரு கொத்து முடி தொங்கும். அதனைப் பிடித்துத்தான் அவனை இழுக்க முடியும். அவன் நகர்ந்து போய்விட்டால், அவனைப் பிடிக்க முடியாது. ஏனென்றால், அவனைப் பிடித்திழுக்க முடியாதபடி அவன் தலையின் பின்புறம் வழுக்கையாக இருக்கும்’ (பக்கம் 9).
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT