Published : 12 May 2024 06:05 AM
Last Updated : 12 May 2024 06:05 AM

ப்ரீமியம்
தொன்மம் தொட்ட கதைகள் - 7: தேவந்தியின் கேள்வி

தேவந்தியின் கதையைத் தமிழ் இலக்கிய வரலாறு, ‘கண்ணகியின் தோழி தேவந்தி’ என்று சுருக்கிவிடுகின்றது. பிற்காலத்தில் கண்ணகி அடைந்த புகழ் தேவந்தியின் இருப்பை இல்லாமல் செய்துவிட்டது. தேவந்தியின் துயரமான வாழ்க்கை, கண்ணகியின் செறிவூட்டப்பட்ட வரலாற்றுக்கு முன் ஒன்றுமில்லாமல் போனது. ஆய்வாளர்கள், பெரும்கதாபாத்திரங்களை மட்டுமே பிற்காலத்தில் விரிவானஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர்; உதிரிகளை அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. அப்படியே எழுதியிருந்தாலும், அவர்களின் கதையை எவ்வித ஆய்வுக்கும் உட்படுத்தாமல் அப்படியே உரைநடையில் திரும்ப எழுதிவைத்தார்கள்.

தேவந்தி ஒரு தொன்மக் கதாபாத்திரம். அவரது வரலாற்றை மறுவாசிப்புக்கு உட்படுத்தும்போது சிலகேள்விகள் எழுகின்றன. பாசாண்டச் சாத்தன் எனும் தெய்வம், மாலதி என்கிறபெண்ணின் துயரைத் துடைப்பதற்காக மனிதனாக அவதார மெடுக்கிறது. தெய்வம் மனித உருக்கொண்டு தேவந்தியுடன் வாழ்க்கை நடத்துகிறது. ஆனால், இல்லற வாழ்க்கையில் ஈடுபடவில்லை. ஒரு கட்டத்தில் விலகியும் சென்றுவிடுகிறது. மாலதியின் துயரத்தைக் கருத்தில் எடுத்துக்கொண்ட சாத்தன், அவர் திருமணம் செய்துகொண்ட தேவந்தியின் துயரத்தை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை. இந்த விமர்சனத்தைத்தான் எம்.ஏ.சுசீலா எழுதியுள்ள சிறுகதையான ‘தேவந்தி’ முன்வைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x