Last Updated : 06 May, 2024 10:27 AM

 

Published : 06 May 2024 10:27 AM
Last Updated : 06 May 2024 10:27 AM

ப்ரீமியம்
அற்றைத் திங்கள் 16 - ‘நடுவுல கொஞ்சம் ... காணோம்’

தகவல்களை மட்டுமல்ல, தகவல்களின் பகுதியை மறைப்பதும் குற்றம். இவ்விஷயத்தில் நீதிமன்றத்தில் காட்டப்படும் கவனம், பொதுவெளியில் காட்டப்படுவது இல்லை. பல சமயம் அது சாமர்த்தியமாகவும் கருதப்படுகிறது. இடம், பொருள், சூழல் முதலியவற்றை விவரிக்காமல் முழுமையிலிருந்து ஒரு சொற்றொடரை மட்டும் உருவி எடுத்து, தங்கள் வாதத்துக்கு ஆதாரமாகச் சிலர் காட்டுகின்றனர். முன்பு எழுத்துலகில் மட்டும் நிலவிவந்தது, இந்த மறைப்புச் செயல். இன்றைக்குத் தொலைக்காட்சி விவாதங்களிலும் யூடியூப் அலைவரிசைகளிலும் இப்படிப்பட்டவற்றை அடிக்கடி கண்ணுறுகிறோம்.

பெரியார் கூறியனவாகக் காட்டப்படும் பல மேற்கோள்கள் இந்த விதத்தில் மிக அதிகம். அதன் உண்மைத் தன்மையைத் தேடிக் கண்டுபிடித்து நிலைநாட்டுவதற்குள், அந்த வதந்தி ஊர் சுற்றி முடித்துவிடுகிறது. பாரதியார் தொடர்பிலும் இது மாதிரியான ஒரு உதாரணம் பிரபலமானது. ‘மெல்லத் தமிழினிச் சாகும்’ என்று பாரதியார் அப்போதே ஆரூடம் கூறிவிட்டார் என்பர் சிலர். நாற்பது ஆண்டுகளாக இந்த அபத்தத்தை நானும் கேட்டு வருகிறேன். ‘என்று அந்தப் பேதை உரைத்தான்’ என அடுத்து வரும் மூன்றாவது தொடரை அவர்கள் சொல்வதேயில்லை. அல்லது அது பாரதியாரின் மேற்கோள் என்பதே அவர்களுக்குத் தெரியாது. குறிப்பிடப்படும் அந்தப் ‘பேதை’யின் பெயரையும் கண்டுபிடித்து தொ.மு.சி.ரகுநாதன் ஆதாரத்துடன் எழுதிப் பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. எனினும், இந்த மேற்கோள் உலா நின்றபாடில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x