Published : 21 Apr 2024 06:55 AM
Last Updated : 21 Apr 2024 06:55 AM
நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் சமீப ஆண்டுகளாக சமூகத்தின் கவனத்தைப் பெறத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாகக் கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் குழந்தைகள் பள்ளி செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்தனர். அந்தக் காலத்தில் குழந்தைகளுக்கான கதை சொல்லுதல்/செயல்பாடுகள் சார்ந்து தமிழ்நாட்டில் சில குழுக்கள் செயல்படத் தொடங்கின. இணையம் வழியே சந்திப்பது பரவலாகத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஏற்கெனவே இயங்கிவருபவர்களுடன் மேலும் இரண்டு தரப்பினர் தமிழ்ச் சிறாா் இலக்கியத் துறையில் இயங்கத் தொடங்கினர். அவர்களில் முதல் தரப்பினர் கதைசொல்லிகள்/ஆசிரியர்கள்/புதிய எழுத்தாளர்கள். மற்றொரு தரப்பினர் குழந்தைகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT