Published : 09 Apr 2024 08:11 PM
Last Updated : 09 Apr 2024 08:11 PM
இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள தொகுதி. திருவிதாங்கூர் மன்னர்கள் கட்டுப்பாட்டிலிருந்த கன்னியாகுமரி மாவட்டம், தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. முக்கடலும் சங்கமிக்கும் இடம், மேற்குத் தொடர்ச்சி மலை என்று சர்வதேசச் சுற்றுலா மையமாகத் திகழ்கிறது. கேரளாவிலிருந்து பிரிந்து வந்த மாவட்டம் என்பதால் கேரள தொடர்புகள் இங்கு அதிகம். தமிழகத்தின் மற்ற அரசியல் சூழ்நிலையிலிருந்து மாறுபட்டு கேரளாவைப் போன்ற சூழல் கொண்ட தொகுதி. மாநில கட்சிகளைவிட தேசியக் கட்சிகள் அதிகம் கோலோச்சும் பகுதி.
குமரியில் கிடைக்கும் இயற்கை ரப்பர் தெற்காசியாவிலே தரமான ரப்பர் என்ற சிறப்புப் பெற்றது. ரப்பர் விவசாயம் மூலம் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள 54 மீனவ கிராமங்களிலும் மீன்பிடித் தொழில் பிரதானம். குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம், சின்னமுட்டம் ஆகிய நான்கு மீன்பிடி துறைமுகங்களில் பிடிக்கப்படும் தரமான மீன்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் அந்நிய செலாவணி ஈட்டப்படுகிறது.
காங்கிரஸ், பாஜக நேரடியாக மோதும் தொகுதியாகவே கன்னியாகுமரி பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இது மட்டுமின்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் செல்வாக்கு உள்ள தொகுதி இது.முன்பு நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியாக இருந்த இந்தத் தொகுதி, மறுசீரமைப்புக்குப் பிறகு கன்னியாகுமரி தொகுதியாக மாறியுள்ளது. பலமுறை காங்கிரஸ் வென்ற இந்த தொகுதியில் பாஜக இரண்டு முறையும், சிபிஎம் மற்றும் திமுக தலா ஒருமுறை வென்றுள்ளன.
இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:
⦁ நாகர்கோவில்
⦁ கன்னியாகுமரி
⦁ குளச்சல்
⦁ விளவங்கோடு
⦁ பத்மநாபபுரம்
⦁ கிள்ளியூர்
கன்னியாகுமரி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,47,378
⦁ ஆண் வாக்காளர்கள்: 7,72,623
⦁ பெண் வாக்காளர்கள்: 7,74,619
⦁ மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 136
முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்
ஆண்டு | வென்றவர் | 2ம் இடம் பிடித்தவர் |
1980 |
டென்னிஸ், காங் | பொன். விஜயராகவன் ஜனதா |
1984 |
டென்னிஸ், காங் | பொன். விஜயராகவன் ஜனதா |
1989 | டென்னிஸ், காங் |
குமாரதாஸ், ஜனதாதளம் |
1991 |
டென்னிஸ், காங் | முகமது இஸ்மாயில் ஜனதாதளம் |
1996 |
டென்னிஸ், தமாகா | பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜக |
1998 |
டென்னிஸ், தமாகா | பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜக |
1999 |
பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜக | டென்னிஸ், காங் |
2004 |
பெல்லார்மின், சிபிஎம் | பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக |
2009 | ஹெலன் டேவிட்சன், திமுக |
பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக |
2014 | பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக |
வசந்தகுமார், காங்கிரஸ் |
2019 |
வசந்தகுமார், காங்கிரஸ் | பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக |
2021 |
இடைத்தேர்தல் விஜய் வசந்த், காங்கிரஸ் |
பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக |
2019-ம் ஆண்டு கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலின் நிலவரம்:
2021-ம் ஆண்டு கன்னியாகுமரி இடைத்தேர்தல்
2024-ம் ஆண்டு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT