Published : 09 Apr 2024 08:00 PM
Last Updated : 09 Apr 2024 08:00 PM
தாமிரபரணி ஆறு பிறப்பெடுத்துப் பாய்ந்தோடும் பகுதி திருநெல்வேலி. ஒரே தொகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையும், கடலும் சங்கமிக்கும் சிறப்புப் பெற்றிருக்கிறது. பாபநாசம் மலையில் தொடங்கி கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள கடல் பகுதி வரை பரந்து விரிந்த தொகுதி இது. குறிப்பாக, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து வகை நிலங்களை உள்ளடக்கிய பெருமை கொண்டது. நெல்லை மாநகராட்சி அமைந்துள்ள நெல்லை மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகள் இந்த தொகுதியின் பிரதான பகுதிகள். இவற்றைத் தவிர பெரும்பாலும் கிராமப்புற பகுதிகளே.
விஜய நாராயணம் ஐஎன்எஸ் கடற்படை தளம், மகேந்திரகிரியில் ஐஎஸ்ஆர்ஓ திரவ இயக்க உந்தும வளாகம் உள்ளன. கூடங்குளம் அணு உலை அமைந்திருப்பதும் இந்தத் தொகுதியில்தான்.இத்தொகுதி மக்களின் பிரதான தொழில்கள் விவசாயமும், பீடி தொழிலும். பருவமழை பெய்து, அணைகளிலும் குளங்களிலும் நீர் பெருகினால் மட்டுமே நெல், வாழை விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட முடிகிறது. மழை பொய்த்துப்போனால் விவசாயமும் பொய்த்துவிடுகிறது.
நீண்ட காலமாகவே அதிமுகவும், திமுகவும் வலிமையாக மோதிக் கொண்ட தொகுதி இது. தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு வரை இந்தத் தொகுதியில் தேசிய கட்சிகளின் ஆதிக்கம் குறைவாகத்தான் இருந்தது. இம்முறை திமுக கோட்டை எனக் கருதப்பட்ட நெல்லைத் தொகுதியில் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுவதும் குறிப்பிடத்தக்கது. இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:
⦁ திருநெல்வேலி
⦁ பாளையங்கோட்டை
⦁ அம்பாசமுத்திரம்
⦁ ஆலங்குளம்
⦁ நாங்குநேரி
⦁ ராதாபுரம்
திருநெல்வேலி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 16,42,305
⦁ ஆண் வாக்காளர்கள்: 8,02,293
⦁ பெண் வாக்காளர்கள்: 8,39,863
⦁ மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 149
முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்:
ஆண்டு | வெற்றி பெற்றவர் | 2-ம் இடம் பிடித்தவர் |
1980 | சிவபிரகாசம், திமுக | அருணாச்சலம், அதிமுக |
1984 |
எம்.ஆர் ஜனார்த்தனன், அதிமுக | சிவபிரகாசம், திமுக |
1989 |
எம்.ஆர் ஜனார்த்தனன், அதிமுக | சிவபிரகாசம், திமுக |
1991 |
எம்.ஆர் ஜனார்த்தனன், அதிமுக | கே.பி. கந்தசாமி, திமுக |
1996 |
சிவபிரகாசம், திமுக | ராஜசெல்வம், அதிமுக |
1998 |
எம்.ஆர் ஜனார்த்தனன், அதிமுக | சரத்குமார், திமுக |
1999 |
பி.எச்.பாண்டியன், அதிமுக | கீதா ஜீவன், திமுக |
2004 | தனுஷ்கோடி ஆதித்தன், காங்கிரஸ் |
அமிர்த கணேசன், அதிமுக |
2009 |
ராமசுப்பு, காங்கிரஸ் | அண்ணாமலை, அதிமுக |
2014 | பிரபாகரன், அதிமுக | தேவதாஸ் சுந்தரம, திமுக |
2019 | எஸ். ஞானதிரவியம், திமுக | பால் மனோஜ் பாண்டியன், அதிமுக |
2019-ம் ஆண்டு திருநெல்வேலி மக்களவைத் தேர்தலின் நிலவரம்:
2024-ம் ஆண்டு திருநெல்வேலி மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT