Published : 09 Apr 2024 07:50 PM
Last Updated : 09 Apr 2024 07:50 PM

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024

2009-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு உருவான மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்று தூத்துக்குடி. முந்தைய திருச்செந்தூர் தொகுதியிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக தூத்துக்குடி தொகுதி உருவாக்கப்பட்டது. தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற தொகுதிதான் தூத்துக்குடி.

தமிழகத்தின் இரண்டாவது துறைமுக நகரம் என சொல்லப்படுகிறது. சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் தொழில் நகரம். சாலை, ரயில், விமானம், கப்பல் என நான்கு வகை போக்குவரத்து வசதிகளைப் பெற்ற தொகுதி தூத்துக்குடி.

பெருமளவு கிராமப்புறப் பகுதிகளைக் கொண்ட இந்தத் தொகுதியில் விவசாயம் பிராதன தொழிலாக இருக்கிறது. தாமிரபரணி பாசனப்பகுதியான ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி போன்றவையும், வறண்ட பகுதிகளான கோவில்பட்டி, ஒட்டபிடாரம் போன்றவையும் இந்தத் தொகுதிக்குள் உள்ளன. சர்ச்சைக்குள்ளான ஸ்டெர்லைட் மட்டுமின்றி பல தொழிற்சாலைகளும் தூத்துக்குடி பகுதியில் அமைந்துள்ளன. தீப்பெட்டி, கடலை மிட்டாய் தொழிலுக்குப் பெயர் பெற்ற கோவில்பட்டியும் இந்தத் தொகுதிக்குட்பட்ட பகுதி.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இங்கு இதுவும் முக்கியமான தொழிலாக இருக்கிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

⦁ தூத்துக்குடி
⦁ திருச்செந்தூர்
⦁ கோவில்பட்டி
⦁ ஸ்ரீவைகுண்டம்
⦁ ஒட்டபிடாரம் (தனி)
⦁ விளாத்திகுளம்

தூத்துக்குடி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 14,48,159

⦁ ஆண் வாக்காளர்கள்: 7,08,234
⦁ பெண் வாக்காளர்கள்: 7,39,710
⦁ மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 215

முந்தைய தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் 2-ம் இடம் பிடித்தவர்

1980
கோசல்ராம், காங் சவுந்திரபாண்டியன், ஜனதா

1984
கோசல்ராம், காங் ஜவகர்லால், ஜனதா

1985
இடைத்தேர்தல் தனுஷ்கோடி ஆதித்தன், காங் பொன்.விஜயராகவன், ஜனதா
1989 தனுஷ்கோடி ஆதித்தன், காங் கார்த்திகேயன், திமுக
1991 தனுஷ்கோடி ஆதித்தன், காங் ஆண்டன் கோமஸ், ஜனதாதளம்

1996
தனுஷ்கோடி ஆதித்தன், தமாகா ஜஸ்டின், காங்கிரஸ்

1998

ராமராஜன், அதிமுக
தனுஷ்கோடி ஆதித்தன், தமாகா

1999
ஜெயசீலன், திமுக பி.பி.ராஜன், அதிமுக
2004 ராதிகா செல்வி, திமுக தாமோதரன், அதிமுக

2009
ஜெயதுரை, திமுக சிந்தியா பாண்டியன், அதிமுக

2014
ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி அதிமுக ஜெகன், திமுக

2019
கனிமொழி, திமுக டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன், பாஜக

2019-ம் ஆண்டு தூத்துக்குடி மக்களவைத் தேர்தலின் நிலவரம்:

2024-ம் ஆண்டு தூத்துக்குடி மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x