Published : 05 Apr 2024 04:49 PM
Last Updated : 05 Apr 2024 04:49 PM
சங்க காலத்தில் அதியமானின் ஆட்சிப் பகுதியாக இருந்த சேலம் பின்னர் சேரர்கள், நாயக்கர்கள், ஹைதர் அலி ஆகியோரின் கட்டுப்பாட்டில் அடுத்தடுத்து வந்தது. 1799-ல் கிழக்கிந்தியக் கம்பெனியின் முக்கிய நிர்வாகப் பகுதியாக மாறியது. ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு, ஆங்கிலேயர்களால் கோடை வாழிடமாக அடையாளப்படுத்தப்பட்டது.
தமிழகத்தின் மிகப் பெரிய நீர்த்தேக்கமான மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில் உள்ளது. ஆனால், அணை மிகத் தாழ்வான பகுதியில் உள்ளதால், அணை நீரில் 10% கூட, சேலம் மாவட்டத்துக்குப் பயன்படுவதில்லை. எனினும், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்குக் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலமாக மேட்டூர் காவிரி நீர் கிடைத்து வருகிறது.
ஏரிப் பாசனத்தை நம்பியிருந்தாலும் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள், சிறு தானியங்கள் உள்ளிட்டவை பரவலாகப் பயிரிடப்படுகிறது. மரவள்ளிப் கிழங்கும் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. வேளாண்மைக்கு அடுத்தபடியாக, ஜவுளி உற்பத்தி, வெண்பட்டு வேட்டி உற்பத்தி, வெள்ளிக் கொலுசு உற்பத்தி, மரவள்ளிக் கிழங்கிலிருந்து சேகோ உற்பத்தி ஆகியவை பிரதானத் தொழிலாக இருக்கின்றன.
ஒரு சுவாரஸ்யம்: 1952-ம் ஆண்டு தேர்தலில் தொடங்கி கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் வரை காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களே அதிகமுறை சேலத்தில் வெற்றிபெற்றுள்ளனர். கொங்கு வேளாளர், வன்னியர், உடையார் என வெவ்வேறு சமூகத்தினரும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:
ஓமலூர்
எடப்பாடி
சேலம் மேற்கு
சேலம் வடக்கு
சேலம் தெற்கு
வீரபாண்டி
சேலம் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 16,48,911
ஆண் வாக்காளர்கள்: 8,23,336
பெண் வாக்காளர்கள்: 8,25,354
மூன்றாம் பாலின வாக்காளர்கள்:221
முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்:
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | 2-ம் இடம் பிடித்தவர் |
1971 |
E. R. கிருஷ்ணன், திமுக | M P சுப்ரமணியம், இந்திய தேசிய காங்கிரசு |
1977 |
கண்ணன் P, அதிமுக | ராஜாராம் K, திமுக |
1980 |
பழனியப்பன். C, திமுக | கண்ணன் P, அதிமுக |
1984 |
ரங்கராஜன் குமாரமங்கலம், காங் | கந்தசாமி. M. A., ஜனதா கட்சி |
1989 |
ரங்கராஜன் குமாரமங்கலம், காங் | M. கார்த்திகேயன், திமுக |
1991 |
ரங்கராஜன் குமாரமங்கலம், காங் | K. P. அர்த்தநாரிசாமி, திமுக |
1996 |
R. தேவதாஸ், தமாகா | கே. வி. தங்கபாலு, காங்கிரசு |
1998 |
வாழப்பாடி ராமமூர்த்தி, சுயேட்சை | R. தேவதாஸ், தமாகா |
1999 |
T. M. செல்வகணபதி, அதிமுக | வாழப்பாடி ராமமூர்த்தி, தமிழக ராஜீவ் காங்கிரஸ் |
2004 |
கே. வி. தங்கபாலு, காங்கிரஸ் | ராஜசேகரன். A, அதிமுக |
2009 |
S. செம்மலை, அதிமுக | கே. வி. தங்கபாலு,காங்கிரஸ் |
2014 |
V. பன்னீர்செல்வம், அதிமுக | உமாராணி. S, திமுக |
2019 | எஸ். ஆர். பார்த்திபன், திமுக |
சரவணன் K. R. S., அதிமுக |
சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக 3 முறையும், அதிமுக 4 முறையும், காங்கிரஸ் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
2019-ம் ஆண்டு சேலம் மக்களவைத் தேர்தலின் நிலவரம்:
2024-ம் ஆண்டு சேலம் மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment