Published : 24 Mar 2024 07:14 AM
Last Updated : 24 Mar 2024 07:14 AM
மார்க்கண்டேயன் கதை பல்வேறு வடிவங்களில் சொல்லப்படுகிறது. சிவனருளால் அவன் என்றும் பதினாறாக இருந்தான் என்பதுதான் இங்கு முக்கியம். புறநானூற்றில் 365வது பாடலைப் பாடியவர் பெயர் மார்க்கண்டேயனார். இன்றும் முதுமையிலும் இளமையாகத் தோற்றமளிப்பவரை மார்க்கண்டேயன் என்று அழைக்கும் வழக்கம் இருக்கிறது. இந்தத் தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் க.நா.சுப்ரமண்யம் ‘ரயிலில் சிரஞ்சீவி’ (1942) என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறார்.
தமிழ்ச் சூழலில் க.நா.சு. ஒரு விமர்சகராகவே அறியப்படுகிறார். சிறுகதை, நாவல் என்று அதிக அளவில் எழுதியிருந்தாலும், அவரது புனைகதைப் பங்களிப்புகள் குறித்துக் குறைந்த அளவே பேசப்பட்டிருக்கிறது. ‘பொய்த்தேவு’, ‘ஒருநாள்’ போன்ற அவரது நாவல்கள் பேசப்பட்ட அளவுக்குக்கூட, அவரது சிறுகதைகள் சார்ந்து வாசிப்பு நிகழ்த்தப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT