Published : 18 Mar 2024 06:13 AM
Last Updated : 18 Mar 2024 06:13 AM
வறுமை, பெண்களுக்கு எதிரான வன்முறை கள், சமத்துவமின்மை ஆகியவற்றை வேரோடு அழிக்கவும் சமூகத்தில் பெண்களின் நிலையை மேம்படுத்தவும் வேண்டும் எனச் சில ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டு விவாதித்தது ஐக்கிய நாடுகள் அவை. ஏற்கெனவே, ஐ.நா. வெளியிட்ட தகவல்கள், உலகின் பல நாடுகளிலும் பெண்களின் சமூக நிலை எந்த வளர்ச்சியும் இன்றிப் பின்தங்கியிருப்பதை வெளிச்சமிட்டுக் காட்டின.
அரசியலில் பெண்கள்: உலகம் முழுதும் 2015 ஆகஸ்ட் மாதம் வரையிலும் தேசிய நாடாளுமன்றப் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 22% மட்டுமே. தற்போதைய எண்ணிக்கை சற்றே உயர்ந்திருக்கிறது என்றபோதும், 26 நாடுகளில் இப்போதும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எனத் தனித்தனியான சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT