Published : 17 Mar 2024 07:06 AM
Last Updated : 17 Mar 2024 07:06 AM
புனைவுகளை மட்டும் மொழியாக்கம் செய்பவர்கள் உண்டு. அபுனைவுகளை மட்டும் மொழியாக்கம் செய்பவர்களும் உண்டு. இவர்களுக்கு மத்தியில் புனைவு - அபுனைவு நூல்களை அனைவரும் விரும்பி வாசிக்கும் அளவில் மொழிபெயர்ப்பதில் திறமை படைத்த கண்ணையன் தட்சிணாமூர்த்தி சாதனையாளர்தான்.
அறிவியல், பொருளாதாரம், சட்ட முறைமை, அயலுறவுக் கொள்கை, வரலாறு, வாழ்க்கை வரலாறு, சுற்றுச்சூழல், தாவரவியல், அறிவியல் மனப்பான்மை, சிறுகதைகள், நாவல்கள் எனப் பல்வேறு துறைகளில் 25-க்கும் மேற்பட்ட நூல்களை மிக எளிமையாகவும், வாசிக்கும் விதத்திலும் மொழியாக்கம் செய்துள்ள அவரே இவ்வாண்டு (2023) மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருதைப் பெற்றுள்ளார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள சைவ சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரம் பாடியருளிய திருமருகல் என்னும் சிற்றூரில் 1962ஆம் ஆண்டு, வீ.கண்ணையன் - சிங்காரவள்ளி ஆகியோரின் மகனாகப் பிறந்தவர். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகப் பணியில் உதவியாளராகச் சேர்ந்தார். சென்னை சட்டக் கல்லூரி மாலை நேர வகுப்பு மூலம் சட்டவியல் பட்டமும் (1985 - 88), சென்னைப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வித் துறை மூலம் தமிழ் இலக்கியத்தில் முதுநிலைப் பட்டமும் (1988-90) பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT