Published : 15 Mar 2024 06:16 AM
Last Updated : 15 Mar 2024 06:16 AM

ப்ரீமியம்
மேகேதாட்டு: வேடிக்கை பார்க்கக் கூடாது அரசு!

தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டுக் காலம் போராடிப் பெறப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம், இந்தியாவிலேயே அமைக்கப்பட்டுள்ள மற்ற ஆணையங்களைவிட சட்ட அதிகாரம் மிக்க தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகவும், உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படும் அமைப்புக்கு இணையானதாகவும் செயல்பட்டுவருகிறது. இதைப் பெற்றுக்கொடுத்தது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அந்த உரிமை பறிபோகும் பேராபத்து இப்போது ஏற்பட்டுள்ளது.

மாறிப்போன சூழல்: காவிரி மேலாண்மை ஆணையத்தின் கடைசிக் கூட்டம் பிப்ரவரி 1 அன்று டெல்லியில் நடந்தது. அக்கூட்டத்தில் கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டுவதற்கான வரைவுத் திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கருத்தை மட்டுமே தெரிவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x