Last Updated : 03 Mar, 2024 06:57 AM

 

Published : 03 Mar 2024 06:57 AM
Last Updated : 03 Mar 2024 06:57 AM

ப்ரீமியம்
இலக்கிய மாமணி விருது: க.பூரணச்சந்திரன் | மொழிபெயர்ப்பால் தமிழைச் செழிப்பாக்கியவர்

பேராசிரியர் க.பூரணச்சந்திரன் (1949) தமிழ்ப் புலமைத்துவ உலகில் அரிய பணிகள் பலவற்றைச் செய்த ஆளுமை ஆவார். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருடைய புலமைத்துறை சார்ந்த செயல்பாடுகள் என்பவை பல பரிமாணங்களைக் கொண்டவை. தமிழில் இலக்கியக் கோட்பாட்டு உருவாக்கம், தமிழியல் தொடர்பான ஆய்வுகள், பல்துறை சார்ந்த மொழியாக்கங்கள் ஆகிய துறைகளில் இவரது பங்களிப்புகள் விதந்து போற்றத்தக்கவை.

தமிழில் சிறுபத்திரிகை இயக்கம் என்பது 1970களில் புதிய பரிமாணம் பெற்றது. பல்வேறு துறைகள் சார்ந்து, வெகுசனப் பண்பாட்டுக்கு மாற்றான புதிய எழுத்துமுறைகள் உருவாயின. அந்த வகையில் திருச்சி நகரத்தை முதன்மையாகக் கொண்டு சிறு பத்திரிகைக் குழு ஒன்று செயல்பட்டது. ‘திருச்சி வாசகர் அரங்கம்’, ‘திருச்சி சினி ஃபோரம்’, ‘திருச்சி நாடக சங்கம்’ என்ற பெயர்களில் இயங்கிய இக்குழுவில் பேராசிரியர் எஸ்.ஆல்பர்ட், அம்ஷன்குமார், கோபால் இராஜாராம், வெளி ரங்கராஜன்,எஸ்.சாமிநாதன், ராஜன்குறை ஆகியோர் செயல்பட்டனர். இந்தக் குழுவோடு தன்னை இணைத்துக்கொண்டு சிறுபத்திரிகை மரபில் செயல்பட்டவர்தான் க.பூரணச்சந்திரன். ஆங்கில மொழியிலும் புலமைத்துவம் உடையவர் பூரணச்சந்திரன். அவர் தமிழில் மாற்று மரபில் செயல்பட, திருச்சியில் இயங்கிய சிறு இயக்கங்கள் அடிப்படையாக அமைந்தன.அந்தத் தொடர்புகளே அவர் நவீனச் செயல்பாடுகளில் ஈடுபாடு கொள்ள வாய்ப்பாக அமைந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x