Published : 25 Feb 2024 07:01 AM
Last Updated : 25 Feb 2024 07:01 AM
எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன் வரலாற்று நிகழ்வுகளை வைத்துத் தொடக்கத்தில் அதிகளவில் சிறுகதைகளை எழுதியுள்ளார். தொன்மம், வரலாறு தொடர்பாக எழுதப்பட்ட இவரது கதைகள்‘காணாமலே காதல்’ தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.அந்த வகையில் ‘விபரீதக் காதல்’ என்ற கதை முக்கியமானது.
மௌரியப் பேரரசர் அசோகர் பொது ஆண்டுக்கு முன்பு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; மகத நாட்டை ஆண்டவர். கலிங்கப் போருக்குப் பிறகு பௌத்த சமயத்தைத் தழுவினார் அசோகர். அசோகரின் மூன்றாம் மனைவி பத்மாவதி. இவர்களுக்குப் பிறந்தவர் குணாளன். அசோகரின் நான்காவது மனைவியான அசந்திமித்ராவின் பணிப் பெண்ணாக வந்தவர் திஷ்யரக்ஷை. இவர் அசோகரின் ஐந்தாவது மனைவியாகிறார். அசோகரின் இறுதிக் காலத்தில் அவரைப் பார்த்துக்கொண்டவர் திஷ்யரக்ஷை; அதனால் அசோகரது அன்புக்குரியவராகிறார்; ஆட்சியில் அதிகாரம் மிக்க இடத்துக்குத் தன்னை உயர்த்திக்கொள்கிறார். அசோகருக்கும் இவருக்கும் வயதில் பெரிய வித்தியாசமுண்டு. இந்தச் சூழலில்தான் திஷ்யரக்ஷையின் மனம் குணாளனை விரும்புகிறது. குணாளனின் கண்கள் அவரைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கின்றன. ஆனால், இவர் குணாளனுக்கு சித்தி முறை; தவிர குணாளனுக்குத் திருமணமும் அப்போது முடிந்திருந்தது. அவர் மனைவி பெயர் காஞ்சனமாலை. குணாளன், திஷ்யரக்ஷையின் விருப்பத்தை நிராகரிக்கிறார். தன் ஆசையைப் பூர்த்தி செய்யாத குணாளனின் கண்களைப் பிடுங்கி எறிகிறார் திஷ்யரக்ஷை. அசோகர் வரலாற்றுடன் இந்தக் கதையும் சொல்லப்படுகிறது. இந்த வரலாற்று நிகழ்வைத்தான் கு.ப.ரா. புனைவாக எழுதியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT