Published : 13 Feb 2024 06:13 AM
Last Updated : 13 Feb 2024 06:13 AM
சென்னைப் பட்டினம் ஒரு பெருநகராக வளரும் என 300 ஆண்டுகளுக்கு முன்பேகிழக்கிந்தியக் கம்பெனியர் கணித்தனர். அவர்களின் தொலைநோக்கில் இன்று சென்னைப் பெருநகரம் உலக நகரங்களோடு ஒப்பிடும் அளவுக்குவளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. ஆயினும் கட்டுச்செட்டான கட்டுப்பாட்டுக்குள்தான் சென்னை வளர்க்கப்பட்டது. பெங்களூருவைப் போல பேராசையோடு வளர்க்கப்பட்டு இருந்தால் வாழத் தகுதியற்ற நகரமாக இது மாறியிருக்கும். அந்த வகையில் நாம் தப்பித்தோம்.
சென்னை வளர்ந்ததற்கு மற்றொரு காரணம், அது ஓர் அரைவட்ட மாநகரம். நகரின் பாதியைக் கடல் எடுத்துக்கொள்கிறது. மீதிப் பாதியில் நகரம் வளர்கிறது. இதன் விளைவாகவே சென்னையின் வணிகப் போக்குவரத்து சர்வதேசப் பிணைப்பைப் பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT