Published : 11 Feb 2024 07:03 AM
Last Updated : 11 Feb 2024 07:03 AM
வ.உ.சிதம்பரனாரைப் பற்றிய தன்னுடைய முதல் ஆக்கத்தை (‘வ.உ.சி. கடிதங்கள்’) 1984இல் வெளியிட்டபோது, ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு வயது 17. வ.உ.சி. மீதான தீராக் காதலால், 40 ஆண்டுகளுக்கும் மேலான தொடர் ஆராய்ச்சியில், வ.உ.சி. இயலுக்குப் பல்வேறு நூல்கள் மூலம் பரந்த பங்களிப்பைச் சலபதி வழங்கியுள்ளார். அவற்றின் தொடர்ச்சியாக, அவர் எழுதியிருக்கும் ஆங்கில நூல், ‘Swadeshi Steam: V.O. Chidambaram Pillai and the Battle against the British Maritime Empire’. சுதேசிக் கப்பல் கம்பெனியின் வரலாற்றை இதுவரை வெளிவராத முற்றிலும் புதிய தகவல்களின் அடிப்படையில் அங்குலம் அங்குலமாக இந்நூல் பதிவுசெய்திருக்கிறது. ‘கப்பலோட்டிய தமிழன்’ என்கிற பதத்துக்கான உண்மையான பொருளை உலகுக்கு எடுத்துச்சொல்லும் நூலாக Swadeshi Steam அமைந்துள்ளது. சலபதியுடனான உரையாடலின் பகுதிகள்:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT