Published : 04 Feb 2024 07:20 AM
Last Updated : 04 Feb 2024 07:20 AM
பேராசிரியர் சம்பகலட்சுமி அறிவியல்நெறி நிலைப்பட்ட வரலாற்றாய்வுக்கு வாழ்நாள் முழுவதும் போராடிவந்தவர். தமிழக வரலாற்றாய்வுக்கு உதவும் வட நாட்டறிஞர்களின் ஆய்வு நூல்களைத் தமிழில் கொண்டுவருவதில் முனைப்புக் காட்டினார். தமிழ் வரலாறு, தொல்லியல், சமயம், பக்தி இயக்கம், அரசியல் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமைபெற்றவர். அந்த வகையில், அவர் தன்னுடைய ஆய்வியல் நெறியில் புதுப் புதுக் கோட்பாடுகளைக் கண்டவர். தொடக்கத்தில் அவர் வெளியிட்ட ‘Vaishnava Iconagraphy in Tamil Country’ என்கிற நூல் குறிப்பிடத்தக்கது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்று, அங்கேயே பணியாற்றும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருந்தது. அவர், அவரிடம் பயிற்சிபெற்ற மாணாக்கர்களான பேராசிரியர் ஏ.சுப்பராயலு, பேராசிரியர் ப.சண்முகம், தமிழ்நாடு தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் ஆகியோர் தொல்லியல் துறையில் போற்றுதலுக்குரியவர்கள். அவருடைய மாணாக்கர்கள் சிலருடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். சம்பகலட்சுமி தன் மாணாக்கர்களை அன்பு காட்டி வளர்த்தெடுத்த முறையைப் பற்றிப் பெருமையுடன் பேசுவர். அந்த மாணாக்கர்களில் ஒரு சிலர் என்னுடன் பணியாற்றியவர்கள். அவர்கள் பல நேரங்களில் அவரைப் பற்றிச் சிலாகித்துப் பேசுவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT