Published : 14 Jan 2024 08:48 AM
Last Updated : 14 Jan 2024 08:48 AM
சென்னைப் புத்தகக் காட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நூல் வெளியீடுகள், எழுத்தாளர் சந்திப்புகள், வாசகர் பங்கேற்பு என அறிவுக் கொண்டாட்டம் நடந்தேறுவதில் பெருமகிழ்ச்சி. மாவட்டம் தோறும் புத்தகக் காட்சிகளும், மாநில அளவில் இலக்கியப் பயிலரங்குகளும், மொழி - இலக்கிய அரங்குகளும் தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பில் தொடர்வது தமிழ் அறிவுச் சூழலை நிச்சயம் மேம்படுத்தும்.
இந்த ஆண்டு மழை பாதிப்பு என்பதைவிட, எல்லா ஆண்டுகளிலும் ஜனவரியில் சென்னைப் புத்தகக் காட்சியை நடத்துவதில் வேறு சிக்கல்கள் இருக்கின்றன. பொங்கல் விழா வருவதால் வெளியூரில் இருந்து புத்தகக் காட்சிக்கு வந்து, திரும்புவதில் வாசகர்கள் போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள். எனவே, சென்னைப் புத்தகக் கண்காட்சியை ஏப்ரல், மே மாதம் நடத்தலாம். ஜனவரி முதல் ஏப்ரல் வரைப் பதிப்பகங்கள் புத்தகங்களைத் தயாரிக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஜூன் முதல் டிசம்பர் வரை தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் நூல் காட்சிகள், விழாக்கள் ஏற்பாடு செய்து நூல்களைச் சந்தைப்படுத்தலாம். அதிக நூல்கள் வெளியாவதும், விற்பனையாவதும், வாசகர்கள் கூட்டமும் நம்பிக்கையளிக்கின்றன. அதே நேரத்தில் புத்தக வாசிப்பு அதிகரித்துள்ளதா? பரவலாகி உள்ளதா? இவற்றை இன்னும் மேம்படுத்த என்ன செய்யலாம் என சிந்திப்பது நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT