Published : 28 Dec 2023 06:13 AM
Last Updated : 28 Dec 2023 06:13 AM
ஜனநாயகத்தை ஆழப்படுத்தி, ஆற்றல்படுத்துவதுதான் ஜனநாயகத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு. ஏழ்மையில் அமிழ்ந்து கிடக்கும் அரசுப் பள்ளிக் குழந்தைகளின் கல்வி மேம்படுவதற்கும் அதுதான் ஒரே வழி. பள்ளி நிர்வாகம் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும்; மாணவர்களின் பெற்றோர் கைகளுக்கு மாற்றப்பட வேண்டும்; முழுமையாகப் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும். கல்வியில் வளர்ச்சி அடைந்த அனைத்து நாடுகளிலும் நிலைத்துத் தழைத்திருக்கும் நிர்வாக அமைப்பு முறை இத்தகையதுதான்.
முடக்கமும் தொடக்கமும்: இந்த ஜனநாயகக் குறிக்கோளை நிறுவுவதற்காகத்தான் இந்தியாவில் 2009இல் கல்வி உரிமைச் சட்டம், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் முழு நிர்வாக அதிகாரங்களும் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் கைகளுக்கு மாற்றப்பட்டன. பெற்றோர், உள்ளாட்சி உறுப்பினர், பெண் தலைவர் கொண்ட இந்த அமைப்பில், கணிசமானோர் பெண்கள். ஏழ்மையில் தவித்திருக்கும் பெற்றோர், பெண்ணடிமைச் சமுதாயத்தில் வார்க்கப்பட்ட பெண்கள் ஆகியோரையே கொண்ட பள்ளி மேலாண்மைக் குழுக்களைவிட ஜனநாயக நெறிக்கு எடுத்துக்காட்டான அமைப்பு இருக்க முடியாது. இது மக்கள்மயமாகும் கல்வியின் முதல் படி எனக் கருதப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT