Published : 19 Dec 2023 06:13 AM
Last Updated : 19 Dec 2023 06:13 AM

ப்ரீமியம்
காப் 28: நூலிழையில் ஊசலாடும் மனித இனம்!

ஐ.நா. காலநிலை மாற்றக் கூட்டமைப்புச் சட்டகத்தின் (United Nations Framework Convention on Climate Change) உறுப்பினர்கள் பங்கேற்ற 28ஆவது காலநிலை உச்சி மாநாடு (Conference of Parties - COP28) துபாயில், நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை நடைபெற்றது. நம்பிக்கையூட்டும் சில நகர்வுகளும், ஏமாற்றம் தரும் பல நிகழ்வுகளுமாக இம்மாநாடு முடிவடைந்திருக்கிறது.

எதிர்பார்ப்புகள்: காலநிலை மாற்றத்துக்கான முக்கியஉடன்படிக்கையான ‘2015 பாரிஸ் ஒப்பந்த’த்தில் உலகின் பெரும்பான்மையான நாடுகள் கையெழுத்திட்டிருக்கின்றன. இதன்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு பெரிய ஆய்வு நடத்தப்படும். இலக்கை நோக்கி எதிர்பார்த்தபடி எல்லா நாடுகளும் செயல்படுகின்றனவா என்பது கணக்கெடுக்கப்படும். பாரிஸ் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு, முதன்முறையாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடந்த இந்த ஆய்வின் முடிவுகள், 28 ஆவது உச்சிமாநாட்டில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மாநாடு தொடங்குவதற்குச் சில நாட்கள் முன்னதாக வெளியான உமிழ்வு இடைவெளி அறிக்கை (Emissions Gap Report), அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x