Published : 11 Dec 2023 06:10 AM
Last Updated : 11 Dec 2023 06:10 AM
எட்டு ஆண்டுகள் இடைவெளியில் சென்னை மாநகரம் மீண்டும் பெருமழையின் தாக்கத்தை, ஊழிப் பெருவெள்ளத்தை, பேரிடரை எதிர்கொண்டிருக்கிறது. மக்கள் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இன்னமும் சில வாரங்கள் ஆகலாம். அதில் உயிரிழப்புகள், பொருள் இழப்புகள், இன்னல்கள், இடர்ப்பாடுகள், துயரங்களை அனுபவிக்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் மழை மட்டுமே காரணமல்ல... நாமும்தான். புயல் குறித்த அறிவிப்புகளும் எச்சரிக்கைகளும் தொடர்ச்சியாக வெளியானபோதும் அதற்குச் செவிசாய்க்காமல் சற்று அசட்டையாக இருந்துவிட்டோமோ எனத் தோன்றுகிறது. பேரிடர்காலச் சூழல் என்பதும் போர்க்காலச் சூழலை ஒத்ததுதானே.மழை, வெள்ளம் குறித்த அச்சம் மக்கள் மனங்களில் இப்போது ஆழமாக நிலைகொண்டுவிட்டது. மழை என்றால் ஏற்படும் மனமகிழ்ச்சி மெல்ல விடைபெற ஆரம்பித்துவிட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT