Last Updated : 28 Nov, 2023 06:16 AM

 

Published : 28 Nov 2023 06:16 AM
Last Updated : 28 Nov 2023 06:16 AM

ப்ரீமியம்
மனநலப் பாதிப்புகள்: சமூக இகழ்ச்சி தவிர்ப்போம்!

மனநலக் கோளாறுகள் குறித்த புள்ளிவிவரங்களும் காரணிகளும் பலராலும் புறந்தள்ளப்படுவது பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை மனநலத்தைப் பாதுகாப்பதும், மனநோய்க்கு உடனடி சிகிச்சைபெறுவதும் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. இதன் விளைவாக, சமூகத்தில் மனநலக் கோளாறுகளின் சுமை அதிகரித்து ‘சிகிச்சை இடைவெளி’ ஏற்படுகிறது. மனநல பாதிப்பும் பிறநோய்களைப் போல ஒரு நோய்தான் என்பதைஏற்றுக்கொள்வதில் தயக்கம், மனநோயை ஓர்அவமானம் என்று நினைப்பது, மூடநம்பிக்கைகள் போன்றவை இதற்கான காரணிகள்.

மனநலத்தின் முக்கியத்துவம்: 2015-2016இல் நடத்தப்பட்ட, தேசிய மனநலக் கணக்கெடுப்பின்படி மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இந்தியாவின் மக்கள்தொகையில் 10% (14 கோடிப் பேர்) எனத் தெரியவந்துள்ளது. மேலும், உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஓர் ஆய்வில், இந்தியா போன்ற குறைந்த-நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் 5 பேரில் 4 பேர், தீவிரமான மனநலக் கோளாறுக்குக்கூட உதவியை நாடுவதில்லை என்று தெரியவந்திருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x