Published : 26 Nov 2023 05:54 AM
Last Updated : 26 Nov 2023 05:54 AM
ஒரு தனித்த நிலத்தின், மக்களின் பண்பாட்டைப் பொது அனுபவமாகத் தன் கதைகள் வழி மாற்றக்கூடிய திறம்கொண்ட எழுத்தாளர் பெருமாள்முருகன். கொங்கு வழக்கையும் அந்தப் பகுதி மக்களின் பச்சையான வாழ்க்கையையும், தீராக் காதலுடன் தொடர்ந்து எழுதிவருபவர் அவர். கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய புனைவு எழுத்தைத் தாண்டியும் பெருமாள்முருகனின் பங்களிப்பு விரிவு கொண்டது.
பெருமாள்முருகனின் கட்டுரை மொழி, வசீகரிக்கும் ஆற்றல் கொண்டது. அவர் எடுத்துக்கொள்ளும் கட்டுரைப் பொருள்கள், சமூகக் குறுக்கீடு செய்யக்கூடிய உள்ளடக்கம் கொண்டவை. இவை அல்லாமல் தன் கதைகளில் விருப்பத்துடன் அவர் சூடிக்கொள்ளும் கொங்கு வட்டாரவழக்குகளை அகராதியாகத் தொகுத்துள்ளார். தி.அ.முத்துசாமிக் கோனாரின் ’கொங்குநாடு’ உள்ளிட்ட பல நூல்களைப் பதிப்பாசிரியராக இருந்து வெளிக்கொண்டுவந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT