Last Updated : 21 Nov, 2023 06:16 AM

 

Published : 21 Nov 2023 06:16 AM
Last Updated : 21 Nov 2023 06:16 AM

ப்ரீமியம்
எலும்பு ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு

சமீபத்தில், மனித எலும்பு வளர்ச்சி குறித்த ஓர் ஆராய்ச்சியில், ரத்தம் தொடர்பான‘ஹீமோகுளோபின்’ பற்றிப் புதிய தகவல்கள் தெரியவந்துள்ளன. தீராத எலும்பு நோய்கள் பலவற்றுக்குப் புதிய சிகிச்சைகள் தோன்றுவதற்கு இந்தக் கண்டுபிடிப்பு உதவக்கூடும் என மருத்துவத் துறை அறிவியலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சீனாவின் முயற்சி: ரத்தம் நம் உயிர் காக்கும் திரவம். ரத்தத்தில் சிவப்பணுக்கள் (Erythrocytes (or) Red Blood Cells), வெள்ளணுக்கள் (Leucocytes), தட்டணுக்கள் (Platelets) என மூன்று வகை அணுக்கள் உள்ளன. இவற்றில் சிவப்பணுக்கள்தான் ரத்தத்துக்குச் சிவப்பு நிறத்தைத் தருகின்றன. இன்னும் குறிப்பாகச் சொன்னால், சிவப்பணுக்களில் ‘ஹீமோகுளோபின்’ (Haemoglobin) எனும் இரும்பு மிகுந்த புரதப்பொருள் ஒன்று இருக்கிறது. இது சிவப்பாக இருக்கிறது. அதனால், ரத்தமும் சிவப்பாக இருக்கிறது. உடல் பாகங்களுக்குத் தேவைப்படும் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்வதும், நுரையீரல் வழியாக கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்ற உதவுவதும் ஹீமோகுளோபின் செய்யும் முக்கியமான பணிகள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x