Last Updated : 19 Nov, 2023 05:17 AM

 

Published : 19 Nov 2023 05:17 AM
Last Updated : 19 Nov 2023 05:17 AM

ப்ரீமியம்
மகத்தான கலைஞனாகப் பரிணமித்த மன்னன் மகேந்திரவர்மன்

பல்லவ அரசன் மகேந்திரவர்ம பல்லவன் 1300 வருடப் பழமையான ‘மத்த விலாசப் பிரகசனம்’ என்ற வடமொழி நாடக நூலை எழுதியுள்ளார். மத்த விலாசப் பிரகசனம் என்றால் ‘கள் குடியன் நாடகம்’ எனப் பொருள்படும் ஒரே ஒரு அங்கம். நான்கே நான்கு காட்சிகளைக் கொண்டது இந்த நாடகம். முதல் காட்சியில் காஞ்சி நகர் வீதியில் சிவ நெறியின் பிரிவுகளில் ஒன்றான காபாலி மதத்தைச் சேர்ந்த சத்திய சோமனன் என்னும் ஒருவன் கள்ளுண்டு போதையில் மயங்கியவனாகத் தன் காதலியோடு களித்துச் சொல்லாடிக் கொண்டுவருகிறான். போதையில் வாய் உளறி, காதலியின் பெயரை மாற்றிச் சொன்னதனால் இருவருக்கும் நடுவே சண்டை சச்சரவு வருகிறது. ‘‘இதற்குக் காரணம் இந்தக் குடிப்பழக்கம்தானே, நான் இதை இன்றோடு விட்டுவிடப் போகிறேன்” என்கிறான் காபாலி. அவளோ “இந்தத் தூய்மையான சமய ஒழுக்கத்தைக் கைவிட வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டு அவனைத் தொழுது காலில் விழுகிறாள். அவன் அவளை எடுத்து அணைத்து “சிவ சிவா, அரஹரா அரஹரா” என்று முணுமுணுத்துக்கொண்டே, “அருமைக் காதலியே! நீ நன்றாய், அழகாக உடுத்திக்கொள்; நன்றாகக் குடி. உன் மான் விழியால் என்னைப் பார்” என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் இதுதான் “இறைவனை அடைவதற்கான முத்தி நெறி” என்று தன் சமயநெறியின் கோட்பாட்டையும் கூறுகிறான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x