Published : 16 Nov 2023 06:13 AM
Last Updated : 16 Nov 2023 06:13 AM
போர்த்துக்கீசிய எழுத்தாளர் ஜோஸெ ஸரமாகோ (Jose Saramago) இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்று 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவரது கொடைகளைக் கொண்டு அமைக்கப்பட்டு லிஸ்பன் நகரில் இயங்கிவரும் ஜோஸெ ஸரமாகோ நிறுவனம் அந்த நிகழ்ச்சியை இம்மாதம் கொண்டாடிவருகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளால், மூன்றாம் உலக மக்கள் சுரண்டப்படுவதையும் ஒடுக்கப்படுவதையும் கண்டனம் செய்துவந்தவர் ஜோஸெ ஸரமாகோ. இந்தோனேசிய, ஆஸ்திரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய கிழக்கு தைமூர் மக்களுக்கும் போர்த்துக்கீசியக் காலனிகளாக இருந்த ஆப்ரிக்க நாட்டு மக்களுக்கும் அவர் ஆதரவு தந்துவந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காகத் தன் கடைசி நாள் வரை குரல் கொடுத்துக்கொண்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT