Published : 10 Nov 2023 06:13 AM
Last Updated : 10 Nov 2023 06:13 AM
நம் நாட்டின் உயர்கல்வித் துறை 56,000க்கும் மேற்பட்ட கல்லூரிகள் - பல்கலைக்கழகங்களை உள்ளடக்கிய உலகளவிலான பெரும் அமைப்பாகும். இது சீனாவைவிட 16 மடங்கு பெரியது. உலக ஆராய்ச்சி - மேம்பாட்டில் அமெரிக்காவும் சீனாவும் இணைந்து 50% பங்களிக்கும்போது, இந்தியா 2.7% பங்களிப்பை மட்டுமே வழங்குகிறது. ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு அறிவியல் ஆராய்ச்சியும் கண்டுபிடிப்புகளும் இன்றியமையாதவை. வளர்ந்த நாடுகளின் வெற்றிக்குக் காரணம், அவை ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் காட்டுவதுதான். நாம் எங்கு தவறுகிறோம்?
தவறிய தரக்கட்டுப்பாடு: பொதுவாக, உற்பத்தி பெருகும்போது தரக்கட்டுப்பாடு உறுதிசெய்யப்பட வேண்டும். கல்வி நிறுவனங்கள் அதிகமாக இருப்பதில் நமக்குப் பெருமைதான். ஆனால், வளர்ச்சியும் தரமும் இணைபிரியாமல் பயணித்தால்தான், நிலையான வளர்ச்சி உறுதியாகும். ஆனால், நம் நாட்டில் அப்படிப்பட்ட வளர்ச்சியை உறுதிசெய்ய விதை இன்னும் விதைக்கப்படவில்லை. ஒருவேளை, வித்திடப்பட்டிருக்கலாம்... முளைக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT