Published : 06 Nov 2023 06:13 AM
Last Updated : 06 Nov 2023 06:13 AM
அண்மையில் ஓர் ஆன்மிகப் பீடாதிபதி காலமானார். அவரது மறைவை, ‘மாரடைப்பால் இறந்தார்’ எனச் சில ஊடகங்கள் குறிப்பிட்டன. இதைப் பலர் விமர்சித்தனர். அதன் பின்னால் உள்ள அரசியலைப் போலவே அவர்களைக் கவலைக்குள்ளாக்கிய பண்பாட்டு அம்சமும் முக்கியம் அல்லவா?
மரணம் பற்றிய குறிப்புகள்: ஆதீனங்களின் மறைவை, முக்தி அடைந்தார், சமாதியானார் என்று குறிப்பது வழமை. அப்படி மரியாதை தொனிக்க இம்மறைவைக் குறிக்க வில்லை என்பதுதான் இணையவாசிகளின் குற்றச்சாட்டு. முக்தியிலும் பரமுக்தி, பதமுக்தி என்று இருப்பதுபோல, சமாதியிலும் ஜல சமாதி, ஜீவ சமாதி எனப் பல வகை உண்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT