Last Updated : 03 Nov, 2023 06:13 AM

 

Published : 03 Nov 2023 06:13 AM
Last Updated : 03 Nov 2023 06:13 AM

ப்ரீமியம்
இந்தியா முன்னேற 70 மணி நேரம் உழைக்க வேண்டுமா?

சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பேசுபொருளாகியிருக்கிறார் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி. கடந்த வாரம் ஒரு நேர்காணலில், இந்திய இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று அவர் பேசியதுதான் சர்ச்சைக்குக் காரணம். “நமது இளைஞர்களின் செயல்திறன் குறைவாக இருக்கிறது. இதை மாற்ற முடியும். அதற்கு ஒவ்வொரு இளைஞரும், ‘இந்திய நாடு என் நாடு. இதை நான் முன்னேற்றுவேன். அதற்காக வாரத்துக்கு 70 மணி நேரம் உழைப்பேன்’ என உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்” - இதுதான் அவரது பேச்சின் சாரம். அவர் பேசியது சரியா?

உடல் நலமும் மன நலமும்: நாராயணமூர்த்தி சொல்வதுபோல் உழைத்தால், வாரத்தில் ஆறு நாள்கள், ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். பொதுவாகவே, ஒருவர் ஏழு மணி நேரமேனும் உறங்க வேண்டும். மேலும், காலைக் கடன்களைக் கழிக்காமல் தீராது. உண்ணவும் உடுக்கவும், நகர நெரிசலில் பணியிடத்துக்குப் போகவும் வரவும், இவை எல்லாவற்றுக்குமாக மூன்று மணி நேரமாவது தேவைப்படும். எஞ்சுவது இரண்டு மணி நேரம். இந்திய இளைஞர்கள் இந்த இரண்டு மணி நேரத்தைத் தங்களுக்காகவும் தங்கள் குடும்பத்தாருக்காகவும் தாராளமாகச் செலவிட்டுக்கொள்ளலாம் என்று இன்னொருவர் ‘பெருந்தன்மை’யாகப் பேசினால் நாம் வியப்படைய வேண்டியதில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x