Last Updated : 22 Oct, 2023 07:47 AM

 

Published : 22 Oct 2023 07:47 AM
Last Updated : 22 Oct 2023 07:47 AM

ப்ரீமியம்
தொ.மு.சி. நூற்றாண்டு நிறைவு: யதார்த்தவாதப் படைப்பாளிகளின் முன்னோடி

தொ.மு.சி

தமிழில் இடதுசாரி இலக்கியம் குறித்து எழுதுகையில் மூன்று ‘சி’ எழுத்தாளர்களைத் தவிர்த்துவிட்டு எவராலும் எழுதவே முடியாது. தொ.மு.சிதம்பர ரகுநாதன், தி.க.சிவசங்கரன், கு.சின்னப்ப பாரதி ஆகிய மூவரும் இடதுசாரி இலக்கியப் படைப்புகளை மக்கள் மனதிற்கு நெருக்கமாகக் கொண்டு சேர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். அதிலும் தொ.மு.சி. பண்டைய இலக்கியம், நவீன இலக்கியம் ஆகிய இரு தளங்களிலும் மிகுந்த அக்கறையுடனும் ஆற்றலுடனும் விளங்கிய சிறப்புக்குரியவர்.

திருநெல்வேலியில் 1923ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று, தொண்டைமான் முத்தையா - முத்தம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் தொ.மு.சி. ‘ரெங்கநாதர் அம்மானை’, ‘நெல்லைப்பள்ளு’ ஆகிய நூல்களை எழுதிய தமிழறிஞர் சிதம்பரத் தொண்டைமான் தொ.மு.சி.யின் தாத்தா. தந்தையார் ஓவியர் - ஒளிப்படக் கலைஞர்; ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதியவர். தொ.மு.சி.யின் அண்ணன் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக மட்டுமின்றி, மரபிலக்கிய ஆய்வாளராகவும் பயண இலக்கிய எழுத்தாளராகவும் விளங்கியவர். இப்படியான சூழலில் வாழ்ந்த தொ.மு.சி.க்கு இளம் வயதிலேயே புத்தக வாசிப்பும் எழுத வேண்டும் என்கிற ஆர்வமும் துளிர்த்ததில் வியப்பு ஒன்றுமில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x