Published : 13 Oct 2023 06:10 AM
Last Updated : 13 Oct 2023 06:10 AM
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றும் ‘ஹென்றி லீ இருக்கைப் பேராசிரியர்’ கிளாடியா கோல்டினுக்கு இந்த ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பெண்களின் தொழிலாளர் சந்தை விளைவுகளைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்தியதற்காக’ இந்த விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் பொருளாதார நோபல் பரிசுப் பட்டியலில், மதிப்புமிக்க பரிசை வென்ற மூன்றாவது பெண் கோல்டின்.
பேராசிரியர் கோல்டின் பொருளாதார வரலாற்றாசிரியர்; தொழிலாளர் பொருளாதார நிபுணரும்கூட. பெண் தொழிலாளர் பங்கேற்பு, வருமானத்தில் பாலின இடைவெளி, வருமானச் சமத்துவமின்மை, கல்வி, குடிவரவு,தொழில்நுட்ப மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது அவரது ஆராய்ச்சி. கோல்டினின் முக்கியமான இரண்டு படைப்புகளைக் கவனப்படுத்தலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT