Published : 11 Oct 2023 06:13 AM
Last Updated : 11 Oct 2023 06:13 AM
2023 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு, மாஸசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரிப் பேராசிரியர் மௌங்கி பவெண்டி (Moungi G. Bawendi), கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர் லூயிஸ் புரூஸ் (Louis E. Brus), நானோ கிரிஸ்டல்ஸ் டெக்னாலஜி நிறுவன முன்னாள் தலைமை விஞ்ஞானி அலெக்ஸி எகிமோவ் (Alexei I. Ekimov) ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குவாண்டம் புள்ளிகள் எனும் நவீனக் குறைகடத்திப் பொருள்களைக் கண்டுபிடித்ததற்காக இம்மூவருக்கும் கிடைத் திருக்கும் அங்கீகாரம் இது.
குறைகடத்தி என்றால் என்ன? - மின்னோட்டத்தை இலகுவாகக் கடத்தும் அலுமினியம், செம்பு போன்ற உலோகங்கள் மின்கடத்திகள். மின்னோட்டத்தை ஏற்கப் பெரும் தயக்கம் காட்டும் கண்ணாடி, பீங்கான், ரப்பர், மரப் பொருள்கள் காப்புப் பொருள்கள். இரண்டுக்கும் இடைப்பட்ட மின்கடத்துத் திறன் கொண்ட பொருள்கள்தாம் குறைகடத்திகள் (Semiconductors).
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT