Published : 04 Oct 2023 06:16 AM
Last Updated : 04 Oct 2023 06:16 AM
தேசியக் குடும்ப சுகாதார ஆய்வு (NFHS-5) தொடர்பாக வெளி யிடப்பட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில், இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு 25% ஆக உள்ளதுஎன்றும், அதேசமயம் ஆண் தொழிலாளர் பங்கேற்பு 57.5% ஆக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதம் மெல்லமெல்லக் குறைந்துகொண்டே வருகிறது. இதில்நகர்ப்புற - கிராமப்புறப் பெண்களுக்கு இடையே கணிசமான வேறுபாடுகளும் உள்ளன.
இந்தியாவைச் சுற்றி: இந்தியாவுடன் ஒப்பிடுகையில், பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் சீனா (61.1%), பூடான் (79%), நேபாளம் (51%), வங்கதேசம் (35%), மாலத்தீவுகள் (34%), இலங்கை (31%) ஆகிய நாடுகள் மேம்பட்ட நிலையில் உள்ளன. பாகிஸ்தான் (21%), ஆப்கானிஸ்தான் (15%), ஈரான் (14%) ஆகிய நாடுகளே பின்தங்கி உள்ளன. கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு, உலகம் முழுவதும் 4.7 கோடிக்கும் அதிகமான பெண்கள் வறுமைநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்கிறது ஆக்ஸ்பாம் அறிக்கை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT