Published : 24 Sep 2023 07:23 AM
Last Updated : 24 Sep 2023 07:23 AM
உலகக் கவி என்றதும் ஷேக்ஸ்பியரில் தொடங்கி நினைவுக்கு வரும் பெயர்கள் பலவாக இருக்கலாம். ஆனால், நவ காலத்தில் ஷேக்ஸ்பியர்போல் உலக மொழிகளில் வாசிக்கப்பட்ட ஒரு மாபெரும் கவி, பாப்லோ நெரூதாவாகத்தான் இருக்க முடியும். தினப்பாட்டை, மிமிக்கிரியை, நகைச்சுவைத் துணுக்குகளை எழுதும் துண்டுக் கவிகளுக்கு இடையில் அவர் ஒரு மகாகவி. காதலையும் புரட்சியையும் கவிதையாகத் தொழிற்படச் செய்வது ஒரு பெரும் தொழில்நுட்பம். அது எல்லாக் காலகட்டத்திலும் மகாகவிகளால் மட்டுமே சாத்தியப்பட்டது. நெரூதா, அதில் விசேஷமானவர்.
கவிதையைக் காப்பாற்ற... லத்தீன் அமெரிக்க நாடான சீலேயில் பிறந்தவர் நெரூதா. எளிய விவசாயப் பின்னணியிலிருந்து வந்தவர். ‘கவிதை எழுதி வீணாய்ப் போய்விடுவானோ’ என நெரூதாவின் தந்தை, தன் மகனின் முதல் கவிதையைப் பார்த்துப் பயந்து, அவரிடம் அவநம்பிக்கையை விதைத்துள்ளார். தன் தந்தையிடமிருந்து தன் கவிதையைக் காப்பாற்ற ரெயஸ் பசால்டோ என்கிற தன் பெயருக்கு மாற்றாக, பாப்லோ நெரூதா என்கிற புனைபெயரைத் தேர்ந்துகொண்டார் நெரூதா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT