Published : 21 Sep 2023 06:13 AM
Last Updated : 21 Sep 2023 06:13 AM
பள்ளி, கல்லூரிப் பருவத்தின் இளவயது மரணங்கள் பெரும் துயரம் தருபவை. நடிகர்-இசையமைப்பாளரின் பதின்பருவ வயது மகள் தற்கொலை செய்துகொண்ட செய்திதமிழ்நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஒரு மனநல மருத்துவராக, அதுவும் குழந்தைகள்-பதின்ம வயதினரின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அறிந்த ஒருவராக இச்செய்தியை அணுகும்போது, தற்கொலை செய்துகொண்டவரோடு நேரடித்தொடர்பு இல்லாவிட்டாலும், குற்ற உணர்வுக்கு ஆட்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
நுணுக்கமாகப் பார்த்தால், குற்றமே புரியாமல் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் ஆழ்மனதில் குற்ற உணர்வு மேலெழும். பெற்றோர் குற்ற உணர்வுக்கு ஆளாகாமல் மீள்வது கடினம். நாம் முறையாகக் கவனிக்கத் தவறினோமா, வேண்டியதைச் சரியாகச் செய்யாமல் விட்டுவிட்டோமா எனப் பல கேள்விகள் அவர்களைத் துளைத்தெடுக்கும்; ஒரு கட்டத்தில் மனஅழுத்தத்தில் தள்ளும். கடினமான இந்தக் காலகட்டத்தைக் கடந்துவருவதற்கு உறவினர்களும் நண்பர்களும் உடனிருந்து அவர்களுக்கு உதவ வேண்டும். தேவைப்படும்பட்சத்தில், மனநல மருத்துவரை அணுகுவதற்குத் தயங்கக் கூடாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT