Published : 15 Sep 2023 06:13 AM
Last Updated : 15 Sep 2023 06:13 AM
ஒரு கோட்பாட்டு நூலை, சிந்தனையாக்கத்தை, கவிதை போன்ற மொழியில் எழுத முடியுமா என்று நீங்கள் யோசித்தால், அவசியம் வாசிக்கவேண்டிய நூல் என மிஷேல் டு செர்டூ (Michel de Certeau, 1925-1986) எழுதிய ‘Practice of Everyday Life’ (1984) என்கிற நூலைக் கூறலாம்.
நாஸிகளிடமிருந்து தப்பிச்செல்லும்போது இளம் வயதிலேயே தற்கொலை செய்துகொண்ட ஜெர்மானிய சிந்தனையாளர் வால்டர் பெஞ்சமினைப் (1892-1940) போலத் தெறிப்புகளும் திறப்புகளும் நிறைந்த நடைக்குச் சொந்தக்காரர் செர்டூ. இயேசு சபை என்றழைக்கப்படும் Jesuit Order (Society of Jesus) பாதிரியாரான இவர், பாரிஸிலும் அமெரிக்காவிலும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT