Published : 11 Sep 2023 08:09 AM
Last Updated : 11 Sep 2023 08:09 AM
கார்லோ கின்ஸ்பெர்க் (பி.1939) இத்தாலி நாட்டைச் சேர்ந்த வரலாற்றாசிரியர், வரலாற்றுக் கோட்பாட்டாளர். இத்தாலிபோலாக்னா பல்கலைக்கழகத்திலும், அமெரிக்காவில்லாஸ் ஏஞ்செலஸ் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்திலும் பணியாற்றியவர். இவர் அறிமுகப்படுத்திய அறிதல் முறை, நுண்வரலாறு (Microhistory) எனப்படுவது. இவரது மிகவும் புகழ்பெற்ற நூலான ‘Cheese and Worms: The Cosmos of a Sixteenth Century Miller’ (1980) இந்த முறையியலின் சிறந்த முன்னோடியாக விளங்குகிறது. கொலம்பியா பல்கலைக்கழத்தில் இவரது உரையைக் கேட்கவும், அதன் பிறகு உரையாடவும் கிடைத்த வாய்ப்பு எனக்கு ஓர் இனிய அனுபவமாக அமைந்தது.
எல்லா மானுடச் சமூகங்களுமே ஏதோ ஒரு விதத்தில் தங்கள் கடந்த காலத்தைப் பதிவுசெய்து வந்துள்ளன. கதைப்பாடல்களாக, கற்பனை கலந்த காவியங்களாகப் பல்வேறு விதங்களில் தாங்கள் அறிந்த நிகழ்வுகளைப் பதிவுசெய்துள்ளன. அப்போதெல்லாம் எழுதுதல் என்பது சாத்தியமாக இருந்தாலும், எதில் எழுதுவது, அதை எப்படிப் பத்திரப்படுத்தி வைப்பது என்பது சவால்தான் என்பதால், பெரும்பாலும் பாடல்களாக, கவிதையாகச் சொல்லி மனனம் செய்து கூறிவிடுவது வசதி. சுவடிகளில் எழுதுவது, அவற்றைத் தொடர்ந்து பிரதி எடுப்பது என்பன போன்ற முறைகளும் ஓரளவு பின்பற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT