Published : 05 Sep 2023 06:19 AM
Last Updated : 05 Sep 2023 06:19 AM

ப்ரீமியம்
கட்டணம் இல்லாப் பேருந்து சேவை: பழங்குடிகள் பலனடைவது எப்போது?

‘கட்டணம் இல்லாப் பேருந்து சேவையைப் பயன்படுத்திவரும் பெண்களுக்கு, மாதம் ஒன்றுக்கு ரூ.888 மீதமாகிறது’ எனத் தமிழ்நாடு திட்டக் குழு மேற்கொண்ட ஆய்வு முடிவு கூறுகிறது. 39% பட்டியல் சாதிப் பெண்கள், 21% மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்கள், 18% பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கட்டணம் இல்லாப் பேருந்து சேவையைப் பயன்படுத்திவருவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தொழில் (திருப்பூர்), வர்த்தகம் (மதுரை), வேளாண்மை (நாகப்பட்டினம்) என மூன்று முதன்மைப் பணிகளைக் கொண்ட மாவட்டங்கள், ஆய்வுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வேலைக்குச் செல்லும் பெண்கள், வேலைக்குச் செல்ல முடியாத பெண்கள், நோய்வாய்ப்பட்டிருக்கும் பெண்கள் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில், கட்டணம் இல்லாப் பேருந்து சேவை பெரும் நன்மையைக் கொடுத்துள்ளது. ஓராண்டில் 13.73 கோடிப் பெண்கள், இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுகின்றனர் என அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x