Published : 04 Sep 2023 06:13 AM
Last Updated : 04 Sep 2023 06:13 AM
நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னத்துரை, அவருடன் படித்த சக மாணவர்களால் அரிவாளால் கடுமையாக வெட்டப்பட்ட நிகழ்வு, நம் எல்லோரையுமே உலுக்கியது. இளம் உள்ளங்களில் விதைக்கப்பட்டுவிட்ட சாதி உணர்வை எப்படி அழிப்பது என்கிற கவலை நம் எல்லோரையும் ஆட்கொண்டுள்ளது. ஆனால், அதைவிட அதிகமாக நம்மை உலுக்குகிற செய்தி என்னவென்றால், ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிலர் வலைதளங்களிலும் யூடியூப் அலைவரிசைகளிலும் பரப்பிவரும் ஒரு பொய்தான்.
இயக்குநர் பா.இரஞ்சித்தின் திரைப்படங்களும் இயக்குநர் மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ திரைப்படமும்தான் சாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, நாங்குநேரி சம்பவத்துக்குக் காரணமாக அமைந்தன என்று தொடர்ந்து பரப்பிவருகிறார்கள். சாதியவாதியாகத் திகழும் படத் தயாரிப்பாளர் ஒருவர், ‘மாமன்ன’னின் வில்லன் கதாபாத்திரத்தைக் கொண்டாடி, ‘நாங்க ரத்தினவேலு வம்சம்டா’ என்று காணொளி ஒன்றைத் தயாரித்துச் சுற்றுக்கு விட்டுள்ளார். சமூக வலைதளங்களில் அது றெக்கை கட்டிப் பறந்துகொண்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT