Last Updated : 28 Aug, 2023 06:13 AM

 

Published : 28 Aug 2023 06:13 AM
Last Updated : 28 Aug 2023 06:13 AM

ப்ரீமியம்
சிந்தனை வெளியைக் காட்டும் சாளரங்கள் - 10 | மிஷேல் ரால்ஃப் டிரியோ: கடந்த காலத்தின் ஒலிக்க விடப்படாத ஓசைகள்

வரலாறு அதன் உருவாக்கத்திலும், அது நினைவுகூரப்படுவதிலும், எழுதப் படுவதிலும் தொடர்ந்து அதிகாரச் சமன்பாடுகளை, ஆதிக்கக் கருத்தியலை அனுசரித்தே செயல்படுகிறது. அதிகாரத்தின் செயல்பாடுகளுக்கும் வரலாற்றுக்கும் உள்ள இந்த நுட்பமான வலைப் பின்னலின் பரிமாணங்களை வெகுசிறப்பாக விவாதிக்கும் சிறிய நூல் ஒன்று உண்டென்றால், அது ‘Silencing the Past: Power and Production of History’ என்ற நூல்தான். இதை எழுதிய மிஷேல் ரால்ஃப் டிரியோ (Michel-Rolph Trouillot, 1949-2012) மேற்கிந்தியத் தீவுக் கூட்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான ஹைட்டியைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்.

இந்த நூலை வழமையான வரலாற்றை மெளனமாக்குதல் என்ற சொல்வழக்கில் கூறாததற்குக் காரணம், அவர் பயன்படுத்தும் ஒரு உருவகம்தான். வரலாற்று நிகழ்வுகள் நடைபெறும்போதே அதில் எளியவர்களின், அடித்தள மக்களின் பங்கேற்பு சைலன்சர் பொருத்தப்பட்ட துப்பாக்கி போலச் செயல்படுகிறது என்று கூறுகிறார். அது வெடிக்கும்; அதன் ஒலி கேட்காது. அடித்தளப் பணியாளர்கள் உயிரைப் பணையம் வைத்துச் செய்யும் சாதனைகளுக்கான அங்கீகாரம் உயரதிகாரிகளுக்குச் செல்வதைக் காண முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x