Published : 25 Aug 2023 06:13 AM
Last Updated : 25 Aug 2023 06:13 AM
சமீபத்தில் கோவைக்குப் போயிருந்தேன். பகல் நேர ரயிலில் சென்னைக்குத் திரும்பினேன். எனக்கு ஜெயகாந்தனின் ‘பகல் நேரத்துப் பாசஞ்சர் ரயில்’ கதை நினைவுக்கு வந்தது. அந்தக் கதை நடப்பது விடுதலைக்கு முந்தைய காலத்தில். அது எல்லா நிலையங்களிலும் நின்று நிதானித்து ஓடிய பாசஞ்சர் ரயில்களின் காலம். இது விரைவு ரயில்களின் காலம். நான் பயணித்த ரயிலின் பெயர் சதாப்தி.
பகல் நேரத்து விரைவு ரயில்கள் 80-களில் வேகம் பிடித்தன. சதாப்தி ரயில்கள் 1988இல் ஓடத் தொடங்கின. மொத்தம் 20-க்கும் மேற்பட்டவை. தென்னகத்துக்கும் இரண்டு ஈயப்பட்டன. 2017இல் தண்டவாளம் ஏறியவை தேஜஸ் ரயில்கள். சமீபத்தில் வந்தவை வந்தே பாரத் ரயில்கள். இதுகாறும் 25 வழித்தடங்கள், இவற்றில் ஐந்திலொன்று தென்னகத்தில் ஓடுகின்றன. இந்த ரயில்களுக்குள் ஒற்றுமைகள் பல உண்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT