Last Updated : 14 Aug, 2023 06:13 AM

 

Published : 14 Aug 2023 06:13 AM
Last Updated : 14 Aug 2023 06:13 AM

ப்ரீமியம்
சிந்தனை வெளியைக் காட்டும் சாளரங்கள் - 9: ஷந்தால் மூஃப்: சமூக முழுமை என்பது முரண் களமே!

ஷந்தால் மூஃப்

ஷந்தால் மூஃப் (Chantal Mouffe, 1943) சமகால அரசியல் சிந்தனையாளர்களில் இடதுசாரி வெகுஜனவியம், முரணரசியல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுபவர். இவரது இணையர் எர்னெஸ்டோ லக்லாவுடன் (Ernesto Laclau, 1935-2014) இணைந்து எழுதிய ‘Hegemony and Socialist Strategy: Towards a Radical Democratic Politics’ (1985) நூல் பரவலான கவனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, இருவரும் தனித்தனியாகப் பல்வேறு முக்கிய அரசியல் கோட்பாட்டு நூல்களைக் கடந்த 30 ஆண்டுகளில் எழுதியுள்ளனர்.

மூஃப், லக்லாவ் இருவருமே இத்தாலிய மார்க்சிய சிந்தனை யாளரான கிராம்சியை அடியொற்றிய சிந்தனையாளர்கள். ஆதிக்க சக்திகளின் கருத்தியல் மேலாதிக்கத்துக்கு எதிராக எளிய, சாமானிய மக்களின் அரசியல் அணிகள் எப்படியான சொல்லாடல்களை, உருவகங்களைப் பயன்படுத்தி அரசியல் முரணை முன்னெடுக்கின்றன என்பதையும், இவை தேர்தல்களில் ஈடுபட்டு ஆட்சியைக் கைப்பற்றுவது, மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுப்பது ஆகியவற்றின் மூலம் எப்படி அதிகாரப் பகிர்வைச் சாத்தியமாக்குகின்றன என்பன போன்ற அரசியல் போக்குகளையும் பற்றிச் சிந்திப்பதில், கோட்பாட்டாக்கம் செய்வதில் ஆர்வம் காட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x