Last Updated : 13 Aug, 2023 08:15 AM

 

Published : 13 Aug 2023 08:15 AM
Last Updated : 13 Aug 2023 08:15 AM

ப்ரீமியம்
அஞ்சலி: புலவர் செ.இராசு | கொங்குநாட்டின் கல்ஹணர்

பழந்தமிழகத்தை சேர, சோழ, பாண்டியர்கள் எனும் முப்பெரும் பேரரசுகளாகக் காண்பதே மரபு. ஆனால், தொண்டை நாட்டையும் கொங்கு நாட்டையும் உள்ளடக்கிய ஐந்நிலமாகவே பழந்தமிழ்நாடு இருந்தது என்கிறார் புலவர் செ.இராசு. தொண்டை நாடு, பல்லவப் பேரரசின் கீழ் இருந்தது. கொங்குநாட்டில் அப்படி எந்தப் பேரரசும் உருவாகவில்லை. எனினும் நில அமைப்பில், நிர்வாக அமைப்பில், பண்பாட்டுத் தனித்துவத்தில் கொங்கு தனிநாடாகச் சிறப்புற்று விளங்கியது என்பதை அவர் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்தார்.

தொல்லியல், கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி எனப் பல்வகைப்பட்ட வரலாற்று ஆதாரங்களையும் ஆவணங்
களையும் ஆய்வுசெய்யும் திறன் கொண்ட, மிகவும் அரிதான வரலாற்றாசிரியர் செ.இராசு. எனவேதான் கொங்குநாட்டின் விரிவான காலநிரல் ஒன்றை அவரால் தனிநபராகவே எழுத முடிந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x