Published : 09 Aug 2023 06:13 AM
Last Updated : 09 Aug 2023 06:13 AM
இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை சமீபத்திய ஆண்டுகளில் கணிசமாக வளர்ந்துள்ளது. கியூஆர் கோடு ஸ்கேனர் இல்லாத மளிகைக் கடைகளே இன்று இல்லை எனும் அளவுக்கு அது பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. குறிப்பாக, ஒருங்கிணைந்த கட்டண இடைமுகமான ‘யுபிஐ’ (Unified Payments Interface), நாம் மேற்கொள்ளும் பணப் பரிவர்த்தனைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான வரவேற்பும் எளிமையான செயல்முறையும் பணம் செலுத்தும் அல்லது பெறும் முறையை இந்தியா முழுவதும் எளிதாக்கியுள்ளன. இருப்பினும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா எங்கே நிற்கிறது?
யுபிஐ அறிமுகம்: யுபிஐ 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலிருந்து, யுபிஐ பரிவர்த்தனைகள் மதிப்பிலும் அளவிலும் வளர்ந்துள்ளன. நவம்பர் 2016இல் முன்னறிவிப்பின்றி அமல்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, 2020இல் கோவிட் பெருந்தொற்றினால் ஏற்பட்ட பொதுமுடக்கம் போன்றவை டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான முக்கியக் காரணிகளாக இருந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT