Last Updated : 18 Jul, 2014 09:10 AM

 

Published : 18 Jul 2014 09:10 AM
Last Updated : 18 Jul 2014 09:10 AM

ஜூலை 18, 1925- ஹிட்லர் தனது ‘மெய்ன் காம்ப் நூலை வெளியிட்ட நாள்

இரண்டாம் உலகப் போருக்குக் காரணமாக இருந்தவர், ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்தவர், லட்சக் கணக்கான யூதர்களைக் கொன்றுகுவித்தவர் என்று அறியப்பட்டுள்ள ஹிட்லர் ஒரு முக்கியமான புத்தகத்தின் ஆசிரி யரும்கூட.

‘மெய்ன் காம்ப்' (எனது போராட்டம்) என்ற அந்தப் புத்தகம், அவர் சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது.

1923 நவம்பர் மாதம் மியூனிக் நகரில், தனது நாஜிக் கட்சிப் படை யினரின் துணையுடன் ஹிட்லர் நடத்திய புரட்சி முறியடிக்கப்பட்டது. 20 பேர் கொல்லப்பட்ட அந்தப் புரட்சிக்குக் காரணமானவர் என்று ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை ஹிட்லருக்கு வழங்கப்பட்டது. எனினும் 9 மாதங்களிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்தபோது தனது உதவியாளர் ருடால்ஃப் ஹெஸ்சின் உதவியுடன் அந்தப் புத்தகத்தை எழுதினார் ஹிட்லர்.

இந்தப் புத்தகம் இரண்டு பாகங் களாக வெளிவந்தது. தனது இளம் வயது வாழ்க்கை, கல்வி, (முதல்) உலகப் போர், தனது அரசியல் நடவடிக்கைகள், ஆரிய இனம் பற்றிய கருத்துகள் போன்ற விஷயங்கள் முதல் பாகத்தில் இடம்பெற்றன. முதல் பாகம், 1925-ல் இதே நாளில் வெளிவந்தது. இரண்டாம் பாகம் 1926-ல் வெளியானது. உலகை மாற்றிய புத்தகங்களுள் ஒன்றாக வரலாற்றிலும் இடம்பிடித்துவிட்டது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x