Published : 10 Jul 2023 06:18 AM
Last Updated : 10 Jul 2023 06:18 AM
இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழ்நாட்டு மீனவர்கள் ஆழ்கடல் சென்று மீன் பிடித்து, கச்சத்தீவைச் சொந்தம் கொண்டாடிய பாரம்பரிய உரிமை தற்போது இல்லை. இந்தியா - இலங்கை இடையே 1974 மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் அந்த உரிமை மறுக்கப்படுகிறது. கச்சத்தீவு தற்போது இலங்கைக்குச் சொந்தமானதாகக் கருதப்படுகிறது. சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டபோது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு, இன்றைக்கு நம் கட்டுப்பாட்டில் இல்லை. போடப்பட்ட ஒப்பந்தம் செல்லுமா என்கிற கேள்விக்கும் இன்றுவரை விடையில்லை.
சட்டம் சொல்வது என்ன? - இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே ஏற்பட்ட, குறிப்பிட்ட நிலப்பரப்புப் பரிவர்த்தனை தொடர்பான பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் 1960இல் ‘பெருபாரி’ வழக்கில் (Berubari Union case) ஒரு தீர்ப்பை அளித்தது. ‘ஒரு நாட்டின் எந்த ஒரு பகுதியையும் இன்னொரு நாட்டுக்கு விட்டுக் கொடுக்கும்போது, அற்கான உடன்பாடு, சம்பந்தப்பட்ட இரண்டு நாடுகளின் நாடாளுமன்றங்களில் ஒப்புதல் பெறப்பட்டு, மேற்படி இரண்டு நாடுகளும் அவற்றைப் பரிமாற்றம் செய்துகொண்டால் மட்டுமே அந்த ஒப்பந்தம் செல்லும்’ என்பதுதான் அந்தத் தீர்ப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT