Published : 06 Jul 2023 06:19 AM
Last Updated : 06 Jul 2023 06:19 AM
அதிகாரத்துக்கு எதிராக மனிதர்கள் போராடுவது என்பது மறதிக்கு எதிரான நினைவின் போராட்டமே என்பார் நாவலாசிரியர் மிலன் குந்தேரா (Milan Kundera). இங்கே நினைவு என்பதை அவர் வரலாறு என்று எழுதியிருக்கவில்லை. நினைவு என வரும்போது அங்கே மறத்தலும் இணைகிறது.
வரலாறு எனச் சொல்கையில் அது கற்றல், கற்பித்தல், அறிதல், தரவுகள், முக்கியத்துவம் ஆகியவற்றோடு கைவிடுதல் அல்லது உயிர்ப்போடு வைத்திருத்தலோடு இணைகிறது. தனிமனிதர்களைப் போலவே சமூகமும் நினைவினாலும் மறதியினாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவை இரண்டையும் அதிகாரம் தனது தேவைகளுக்கு ஏற்பப் பயன்படுத்திக்கொள்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT