Last Updated : 28 Jun, 2023 06:16 AM

 

Published : 28 Jun 2023 06:16 AM
Last Updated : 28 Jun 2023 06:16 AM

ப்ரீமியம்
சொல்… பொருள்… தெளிவு | வாக்னர் கலகம்

ரஷ்யாவின் சார்பில் உக்ரைன் போரில் ஈடுபட்டிருந்த வாக்னர் குழு என்னும் தனியார் ராணுவப் படை, ஜூன் 23 அன்று ரஷ்யாவுக்கு எதிராகக் கலகத்தைத் தொடங்கியது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்கே ஷோய்கு, அரசு ராணுவப் படைகளின் தலைவர் வாலரி ஜெரசிமோவ் இருவரையும் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என ரஷ்ய அரசுக்கு வாக்னர் குழுவின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் நிபந்தனை விதித்தார்.

உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரில் அமைந்துள்ள தெற்கு ரஷ்ய ராணுவத் தலைமையகத்தை வாக்னர் குழு கைப்பற்றிவிட்டதாக ப்ரிகோஷின் காணொளி ஒன்றை வெளியிட்டார். தங்கள் நிபந்தனையை வலியுறுத்தி வாக்னர் குழுவினர், தலைநகர் மாஸ்கோவை நோக்கி ஆயுதங்களுடன் அணிவகுத்துச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x