Published : 23 Jun 2023 07:17 AM
Last Updated : 23 Jun 2023 07:17 AM
‘கையால் மனிதக் கழிவு அகற்றுவோர்’ (Manual scavengers) என்ற சொற்றொடர் இந்தியாவில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. ஏன் இந்தத் தனிப்பெரும் ‘பெருமை’? இந்த மானுட அவலம் சாதியத்தில் வேர் கொண்டிருப்பதால், சாதியம் ஆயிரம் ஆண்டுக் கால ‘மாண்பு’ என்பதால், தீண்டாமை நம் தனித்துவம் என்பதால், மனித கண்ணியத்தைக் குத்திக் கிழித்துச் சிதைத்து எறியும் ‘சமூக நெறி’களில் நாம் இணையற்றவர் என்பதால்!
தொடரும் இறப்புகள்: ஐந்து நாள்களுக்கு ஒருவர், சாக்கடைகளைச் சுத்தம்செய்யும்போது இறந்துபோகிறார் என்கிறது தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையம்
(National Commission for Safai Karamcharis). 1993 முதல் 2022 வரை 1,054 பேர் மலக்குழியில் இறந்திருக்கின்றனர் என ஆணையத்தின் புள்ளிவிவரம் சொல்கிறது. இந்த எண்ணிக்கை ஆணையத்தைச் சென்றடைந்த புள்ளி விவரம் மட்டுமே. இதில் அடங்காத மலக்குழி மரணங்கள், ஊர்-பேர் தெரியாத, சாதி மட்டும் சந்தேகமின்றித் தெரிந்தவை எத்தனையோ!
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT