Last Updated : 20 Jun, 2023 08:19 AM

1  

Published : 20 Jun 2023 08:19 AM
Last Updated : 20 Jun 2023 08:19 AM

ப்ரீமியம்
சமூக ஊடகச் சுதந்திரம்: ஜாக் டோர்ஸியின் விமர்சனம் சரியா?

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது, குறிப்பிட்ட சிலரின் ட்விட்டர் கணக்குகளை முடக்கச் சொல்லி அழுத்தம் தரப்பட்டதாக ட்விட்டர் நிறுவனர்களில் ஒருவரும் அதன் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியுமான ஜாக் டோர்ஸி முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

அண்மையில், தனது அமெரிக்கச் சுற்றுப்பயணத்தின்போது மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர்ராகுல் காந்தி கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். முதன்முறையாக அரசுமுறைப் பயணமாக, பிரதமர் மோடி ஜூன் 20 (இன்று) அமெரிக்காவுக்குச் செல்கிறார். முக்கியமான இந்தக் காலகட்டத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த ‘பிரேக்கிங் பாயின்ட்ஸ்’ (Breaking Points) என்னும் யூடியூப் சேனலுக்கு ஜூன் 12 அன்று அளித்த பேட்டியில், ஜாக் டோர்ஸி இப்படி ஒரு கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார். ஒத்துழைக்க மறுத்தால் இந்தியாவில் ட்விட்டர் நிறுவனம் மூடப்படும்; ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டதாகவும், சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஆனால், அவர் சொல்வது முற்றிலும் பொய் என்கிறது மத்திய அரசு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x